தேதி குறிப்பிடப்பட்ட மரணத்தின் வலி
என் மனதில்...
துணை வேண்டாம் என துணை நின்ற அக்கா,
வீட்டிற்கு வந்து எடுத்துரைத்த ஆசிரியர்,
இவர்கள் வார்த்தையை விட என் தந்தைக்கு
அந்த நாலு பேர் வார்த்தைகளே பெரிதாய் தோன்றின.
உட்கார்ந்து தேய்த்த மர பலகைகள்
எழுதி தேய்த்த கரும் பலகைகள்
குட்டி போட்ட மயில் இறகுகள்
இவை எல்லாம் இன்றைக்கு காட்சிகள்
நாளைக்கு நினைவுகள்
தோழி ப்ரியா விடை கொடுக்க
என் பள்ளிக்கு பிரியா விடை கொடுத்தேன்
வழியில் அஸ்தமனத்தில் ஆதவனை பார்த்தேன்
நிறம் மாறியிருந்த கண்களில் சோகம் பார்த்தேன்
காரணம் கேட்டேன்
"நடிப்பு வேண்டாம்! என் அஸ்தமனம் தெரியவில்லையா?"
பார்வையில் மறைந்திருந்த வெப்பம் பதிலில் தெரிந்தது.
"தெரியும். உனக்கு நாளை ஓர் விடியல் வரும்.
ஆனால் எனக்கு?"
( SWADES படத்தில் வரும் ஒரு பெண்ணின் பார்வையின் பாதிப்பே இந்த கவிதை )
Wednesday, March 29, 2006
Tuesday, March 28, 2006
Friday, March 24, 2006
அடக்கூ
சுஜாதாவின் பட்டறைகளில் ஒன்றானது ஹைபுண். இரண்டே வரியில் கதை. நிறைய யோசித்தும் ஒன்று கூட புலப்படவில்லை. அதனால் இதோ அடக்கூ.
சாதரணமாக ஹைக்கூ என்றால் படித்த உடன் "ஹை" என்று சொல்ல வைப்பவை. இந்த அடக்கூ சற்று விசித்திரமானது. "அட" என்று சொல்ல வைப்பவை. இல்லையெனில் "அட கூமுட்டை" என்று சொல்ல வைப்பவை.
விதிமுறைகள் இதுவே. ஒரே அடியில் மூன்று சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
காதல்

இதோ என் கன்னி முயற்சி.
காதல்
'கரு'க்களின் கரு
(அர்த்தம் புரிந்ததெனில் பின்னூட்டவும். இல்லையென்றாலும் பின்னூட்டவும்.)
Tuesday, March 21, 2006
Subscribe to:
Comments (Atom)