முகமூடி தொலைத்தேனா?
முகமூடி அணிந்தேனா?
முகம் தொலைத்த நாள் முதலாய்
விடையே தெரியாத கேள்வி இது
முகம் தொலைத்த நாளே மறந்ததால்
கேள்வியே இல்லாத கேள்வி இது
அறிந்து செய்வதே நாம் செய்ததெனில்
அனிச்சை செயலென்ன அந்நியமா?
அறிக்கை செய்வதே நினைவில் இருக்கையில்
அறிக்கையாய் இருப்பது தான் அந்நியமா?
மீனவனின் காத்திருப்பு மீனுக்காகவா?
பிடித்த மீனை விற்பதற்காகவா?
நான் தேடும் அந்த விடையும்
தூண்டில் தேடும் அந்த மீனின் உவமையே
உருவம் இல்லாத என் முகமும்
அந்த மீனவனின் உருவகமே
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nice to read you after a long time..
was really impressed with the lines..
அறிந்து செய்வதே நாம் செய்ததெனில்
அனிச்சை செயலென்ன அந்நியமா?
super o super !!
otha kanna pinna'nu ezhuthi iruka... enaku onnum puriyala... beyond my comprehension... could be on either side of the spectrum... will read many times over and try to understand...
Post a Comment